10 &12ம் வகுப்பு மாணவர்கள் – மறு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு! வெளியீடு 561365019
10 &12ம் வகுப்பு மாணவர்கள் – மறு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு! வெளியீடு தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் இன்று வெளியிட்டார். மேலும் 93.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டில் தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறவில்லை. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியது. இதனால் பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் இறுதி வரை நடைபெற்றது. மேலும் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் பொதுத் தேர்வு தொடங்கி மே 28ம் தேதி நிறைவுற்றது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 37ஆயிரத்து 317 பேர் எழுதியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட மையங்களில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடை...