தமிழகத்தில் மீண்டும் சுழற்சி முறையில் வகுப்புகள்?.. வேதனையில் பெற்றோர்கள்...!903130702
தமிழகத்தில் மீண்டும் சுழற்சி முறையில் வகுப்புகள்?.. வேதனையில் பெற்றோர்கள்...! தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி இரண்டு வாரங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரிப்பது மாணவர்களின் கல்வி குறித்தும் உடல்நிலை குறித்தும் ஒரு சில கவலையை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் சில தனியார் பள்ளிகள் கொரோனா காரணமாக வகுப்புகளை சுழற்சி முறையில் அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடத்தலாமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தவும் அதன் பிறகு அரசின் அறிவிப்பை தொடர்ந்தும் வகுப்புகளை மாற்றும் முடிவை தனியார் பள்ளிகள் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.