தமிழகத்தில் இன்று (14-05-2022) மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!!
தமிழகத்தில் இன்று (14-05-2022) மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!! தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (14-05-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம்: நாகர்கோவில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மீனாட்சிபுரம் துணைமின் நிலையத்தில் புதிய மின்மாற்றி மாற்றம் செய்வதற்கு மீனாட்புரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் பெறும் மின்பாதைகளில் மாற்று வழி மூலமாக மின்னோட்டம் செய்ய அவசர பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக (14-ந்தேதி) காலை 10 மணி முதல் 3 மணி வரை வேட்டாளி அம்மன் கோவில் முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை உள்ள பகுதிகள் (வெள்ளாளர் காலனி, ஆர்.பி.புரம், தங்கம்மாள் தெரு) பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.