திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அருள்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் பணி புரியும் நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணி புரியும் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வினீத் பேசியதாவது: நியாய விலைக்கடைகளை ஊழியர்கள் உரிய நேரத்தில் திறந்து அன்றாட இருப்பு விவரத்தை தேதி மற்றும் எடைகளுடன் தெளிவாக அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும். விரிவாக படிக்க >>