வாணியம்பாடியில் ரயில்வே கேட் தார்சாலை சீரமைப்பு: அதிகாரிகள் நடவடிக்கை


வாணியம்பாடியில் ரயில்வே கேட் தார்சாலை சீரமைப்பு: அதிகாரிகள் நடவடிக்கை


வாணியம்பாடி:  வாணியம்பாடியில் தினகரன் செய்தி எதிரொலியாக ரயில்வே கேட் தார்சலையை சீரமைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில், கடந்த வாரம் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால், ரயில்வே தண்டவாளத்தில் இருந்த ஜல்லி கற்கள் தார் சாலையில் ஆங்காங்கே சிதறி வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

இதனை சரி செய்ய வேண்டும் என்று தினகரன் நாளிதழில் கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, விரைந்து நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலை துறையினர், நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் சாலையை சீர் செய்து, புதிய தார்சாலை அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags:

வாணியம்பாடி ரயில்வே கேட் தார்சாலை சீரமைப்பு

Comments

Popular posts from this blog