மே மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை!
மே மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை!
இந்திய ரிசர்வ் வங்கி மே மாதத்திற்கான விடுமுறை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. மே மாதத்தில் மட்டுமே பண்டிகைகள் மற்றும் வார இறுதி நாட்கள் என அனைத்தையும் சேர்த்து 14 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி தான் ஒவ்வொரு ஆண்டிற்கான வங்கி விடுமுறை நாட்களை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கு மட்டும் தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி முதலான பண்டிகை தினங்களையும் சேர்த்து 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் மாதம் முடிவடைய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மே மாதத்திற்கான விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மே தினம், குரு ரவீந்திரநாத் ஜெயந்தி போன்ற பண்டிகைகள் மே மாதத்தில் தான் வருவதால் வார விடுமுறை தினங்களையும் சேர்த்து ஏப்ரல் மாதத்தில் மட்டுமே 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விடுமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது. எந்த மாநிலத்தில் எந்தெந்த தினங்களிளெல்லாம் விடுமுறை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டு வங்கிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள் என அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.
ஆனால் வங்கி விடுமுறை தினங்களிலும் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியல் இதோ,
- 1-05-2022 : மே தினம்
- 2-05-2022 : மகரிஷி பரசுராம் ஜெயந்தி குறிப்பிட்ட மாநிலங்கள்
- 3-05-2022 : இதுல் பித்ர், பசவ ஜெயந்தி (கர்நாடகாவில் விடுமுறை)
- 4-05-2022 : இதுல் பித்ர் – தெலுங்கானாவில் விடுமுறை
- 8-05-2022 : ஞாயிறு
- 9-05-2022 : குரு ரவீந்திரநாத் ஜெயந்தி மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா
- 13-05-2022 : இதுல் பித்ர் – தேசிய விடுமுறை
- 14-05-2022 : 2வது சனிக்கிழமை
- 15-05-2022 : ஞாயிறு
- 16-05-2022 : புத்த பூர்ணிமா சிக்கிம் மற்ற சில மாநிலங்கள்
- 22-05-2022 : ஞாயிறு
- 24-05-2022 : காசி நஸ்ருல் இஸ்லாம் பிறந்த நாள் – சிக்கிம்
- 28-05-2022 : 4வது சனிக்கிழமை
- 29-05-2022 : ஞாயிறு
Comments
Post a Comment