“என் காதலன் எனக்கு மட்டும் தான்”


“என் காதலன் எனக்கு மட்டும் தான்”


இதையும் படிங்க

ஆசிரியர்

என் காதல் எனக்கு மட்டும் தான், நாங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என முன்னாள் காதலிக்கு கவர்ச்சி நடிகை கூறி உள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், தன் காதல் கணவரான ரித்தேஷை பிரிந்துவிட்டதாக அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். வீடியோ கால் மூலம் தன் காதலரை செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் ராக்கியை விட ஆறு வயது இளையவர். ராக்கிக்கு பி.எம்.டபுள்யூ காரை பரிசளித்தார் ஆதில். ராக்கி சாவந்துக்கு ரோஷினா தல்வாரி என்பவர் போன் செய்து பேசியிருக்கிறார்.

மைசூரை சேர்ந்த ரோஷினா கூறியதாவது, நானும், ஆதில் கானும் 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம் என்றார். மேலும் தன் காதலரிடம் இருந்து தள்ளி இருக்குமாறு சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ரோஷினா. தானும், ஆதிலும் நேரம் செலவிட்டது குறித்து விவரித்துள்ளார். ரோஷினா போன் செய்ததும் ஆதிலை அழைத்து கேட்டிருக்கிறார் ராக்கி சாவந்த்.

அதற்கு ஆதில் கானோ, ரோஷினா தன் முன்னாள் காதலி என்று பதில் அளித்திருக்கிறார். ஆதில் கான் தற்போது ராக்கியை காதலிப்பது ரோஷினாவுக்கு பிடிக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ரோஷினா பற்றி ராக்கி கூறியதாவது, ரோஷினா எனக்கு போன் செய்ததால் எதுவும் மாறப் போவது இல்லை. ஆதில் எனக்கு மட்டும் தான். ரோஷினா அவரின் முன்னாள் காதலி. ஆதிலும், நானும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்றார். மற்றொரு பேட்டியில் ஆதிலின் குடும்பம் நான் கவர்ச்சியான நபர் என்பதால் என்னை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் ஆடை அணிவது அந்த குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என கூறி உள்ளார்.

இதையும் படிங்க

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

Comments

Popular posts from this blog