ஜம்முவில் இன்று காலை சிஐஎஸ்எப் வீரர்கள் மீது தாக்குதல் : ஒருவர் வீரமரணம்; 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை



ஸ்ரீநகர் : ஜம்முவில்  சிஐஎஸ்எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். ஜம்முவில் சதா முகாம் அருகே இன்று காலை 4.25 மணிக்கு 15 சிஐஎஸ்எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது திடீரென்று தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். இதனால் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Tags:

ஜம்மு
விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog