கேஜிஎப் படத்தின் இசையமைப்பாளர் ஒரு இருப்பு தொழிலாளியா?


கேஜிஎப் படத்தின் இசையமைப்பாளர் ஒரு இருப்பு தொழிலாளியா?


2018ம் ஆண்டு வெளியான கேஜிஎப் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கேஜிஎப் 2 படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.  கொரோனா சூழல் காரணமாக கேஜிஎப் 2 படத்தின் வெளியீடு தள்ளி போனது.  இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் இதனால் வருத்தமடைந்தனர்.  தற்போது ஒருவழியாக ஏப்ரல் 14-ம் தேதி கேஜிஎப் 2 படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.  தமிழகத்தில் இப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.  

 

கேஜிஎப் 2 படத்தில் திரைக்கதையில் இருந்த பிரமாண்டத்தை போலவே, படத்தொகுப்பு, இசை என அனைத்திலும் இருந்தது.  கேஜிஎப் 2 படத்தின் எடிட்டர் ஒரு 19 வயது சிறுவன் என்ற தகவல் வெளிவந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.  உஜ்வல் குல்கர்னி என்பவரின் வேலையை கண்டு வியந்து இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கினார்.  இதே போல் கேஜிஎப் படத்தின் இசையமைப்பாளர் ஒரு இரும்பு தொழிலாளி என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கேஜிஎப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை தனது உக்ரம் படம் மூலம் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தி உள்ளார் பிரசாந்த் நீல்.  

தற்போது தன் திறமையால் ரவி பஸ்ரூர் கன்னட படங்களை தாண்டி பாலிவுட் படம் வரை இசையமைத்து வருகிறார்.  கேஜிஎப் 2 படத்தில் அவரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.  இரும்பு பட்டறையில் ரவி பஸ்ரூர் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  உலகம் முழுவதும் கேஜிஎப் 2 படம் 2 நாட்களில் 240 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  

Comments

Popular posts from this blog