சூப்பர் கிங்சுக்கு எதிராக திலக் வர்மா அரை சதம்
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், திலக் வர்மாவின் அரை சதத்தால் மும்பை இந்தியன்ஸ் கவுரவமான ஸ்கோரை எட்டியது. டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசியது. கேப்டன் ரோகித், இஷான் கிஷன் இருவரும் மும்பை இந்தியன்ஸ் இன்னிங்சை தொடங்கினர். முகேஷ் சவுதாரி வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் ரோகித் ஷர்மாவும், 5வது பந்தில் இஷான் கிஷனும் டக் அவுட்டாகி நடையை கட்ட... மும்பை அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.
டிவால்ட் பிரெவிஸ் 4 ரன் எடுத்து முகேஷ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் தோனியிடம் பிடிபட்டது, மும்பை அணிக்கு மேலும் நெருக்கடியை கொடுத்தது. வழக்கம்போல அதிரடியை காட்டிய சூரியகுமார் 32 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி, சான்ட்னர் பந்துவீச்சில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment