சமையல் எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் ரஷ்யா-உக்ரைன் போரினால் சூரியகாந்தி, பாமாயில், இன்று டால்டா உள்பட பல்வேறு சமையல் எண்ணெய்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் விற்பனை பெருமளவில் குறைந்திருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். உக்ரைன் நாட்டின்மீது கடந்த சில மாதங்களாக ரஷ்யா தீவிர போர்த் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இப்போரின் தாக்கம் பொதுமக்களை பல்வேறு வகைகளில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை தொடர்ந்து காய்கறிகளின் விலையும் உயர்ந்தன. தற்போது சமையல் எண்ணெய்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் சூரியகாந்தி, பாமாயில், டால்டா போன்ற சமையல் எண்ணெய்கள் கடந்த வாரங்களாக லிட்டருக்கு ரூ10 முதல் ரூ15 வரை அதிகரித்துள்ளது....
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment