தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!


தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!


சென்னை ராஜா அண்ணாமலை புரம் இளங்கோ தெருவில், 250-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்துத் தள்ளும் பணி நடைபெற்று வருகிறது. ராஜிவ் ராய் என்பவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், பசுமை வழிச் சாலையையும், காமராஜர் சாலையையும் இணைக்கும் 40 அடி அகலம் கொண்ட பக்கிங்காம் - கால்வாயின் தெற்குக் கரையை ஆக்கிரமித்துள்ள ஆர்.ஏ.புரம், இளங்கோ தெருவைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து அகற்றுமாறு உத்தரவிட்டது. 

இதன் அடிப்படையில் வீடுகளை இடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அப்போது இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று கண்ணையா என்ற 60 வயது முதியவர் தீக்குளித்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ராஜா அண்ணாமலை புரம் கோவிந்தசாமி நகரில் நடைபெற்ற சம்பவத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற சம்பவம் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். இனி வரும் காலங்களில் குடிசைகள் அகற்றுவதற்கு முன்கூட்டியே அங்கு வசித்து வரும் மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும்.

மறு குடியமர்வு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்ட பின்னரே ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மறு குடியமர்வு வழங்குவதற்கான விதிமுறைகள் விரைவில் வகுக்கப்படும். மயிலாப்பூர் - மந்தவெளி பகுதியில் கட்டப்பட்டு வரும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு துறை சார்பில் உள்ள வீடுகளை இப்பகுதி மக்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளோம். 
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன், முதல்வரின் உத்தரவுக்கிணங்க தீக்குளித்து உயிரிழந்த கண்ணையன் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவியாக வழங்கப்படும் என தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog