2008-ல் முதல் ஐபிஎல் தொடரில் வென்ற சாம்பியன் ராஜஸ்தானும், முதல் ஐபிஎல் சாம்பியன் கனவுடன் குஜராத் அணியும் மோதல்
2008-ல் முதல் ஐபிஎல் தொடரில் வென்ற சாம்பியன் ராஜஸ்தானும், முதல் ஐபிஎல் சாம்பியன் கனவுடன் குஜராத் அணியும் மோதல்
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மிகவும் இமோஷனலான தருணம், ஏனெனில் ஷேன் வார்ன் தலைமையில் 2008-ல் கோப்பையை வென்றது, இப்போது பிளே ஆஃபில் வென்று இறுதிக்குப் போனால் மறைந்த ஷேன் வார்னுக்கு ஒரு அஞ்சலியாக ஐபிஎல் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை அவருக்கு சமர்ப்பிக்க முடியும்.
மாறாக தன் முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பையை தட்டிச் செல்லும் முனைப்புடன் பாண்டியா படை களமிறங்குகிறது. அனுபவம் வாய்ந்த பேட்டர் ஜோஸ் பட்லர் மீண்டும் அணிக்காக பெரிய ரன்களை எடுக்க வேண்டிய பொறுப்பை ஏற்றார். இந்த சீசனில் 14 போட்டிகளில் 629 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்.
இதற்கிடையில், குஜராத் அணிக்காக, கேப்டன் ஹர்திக் பேட்டிங் வரிசையில் தன்னை உயர்த்திக் கொண்டு தனது அணியை முன்னணியில் இருந்து வழிநடத்தினார். இந்த சீசனில் அவர் 13 போட்டிகளில் 413 ரன்கள் எடுத்தார், அதே சமயம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 18 விக்கெட்டுகளை எடுத்து பந்து வீச்சில் பிராமதப்படுத்தினர். எனவே இந்தப் போட்டியை செஹலுக்கும் பாண்டியாவுக்கும் ஆன மோதலாகவும் மறுபுறம் ஷமிக்கும் பட்லருக்குமான போராட்டமாகவும் சுவாரசியம் கூட்டுகிறது.
அதிரடியில் பெரிய வித்தியாசம் என்னவெனில் டைட்டன்ஸ் இந்த சீசனில் 69 சிக்ஸர்களை அடித்துள்ளது. ராயல்ஸ் அதிகபட்சமாக 116 சிக்சர்கள் அடித்துள்ளது. இது பெரிய வித்தியாசம், இது வெற்றி தோல்வியை தீர்மானிப்பதாக அமையலாம்.
விருத்திமான் சஹா நிச்சயம் ஒரு அபாயகரமான பெட்டர், ஷுப்மன் கில்லை எடுக்க வேண்டும் என்ற நியதியில் சஹாவை அடிக்க விட்டால் பெரிய தொடக்கத்தை குஜராத் காணும். பிறகு பாண்டியா, வேட், மில்லர், திவேத்தியா என்று அனைவரும் அடித்து நொறுக்குவார்கள். பவுலிங்கில் தமிழக வீரர் சாய் கிஷோர் நன்றாக ஸ்பின் செய்கிறார். கோலியே இவரை மரியாதை கொடுத்து ஆடினார். அதே போல் ரஷீத் கான் செம டைட்டாக வீசுகிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸின் வெற்றி தோல்வி ஜாஸ் பட்லரின் கையில் தான் உள்ளது. இவர் கடந்த சில போட்டிகளாக சரியாக ஆடவில்லை, ஆனால் இவரால் ஏற்படும் இழப்பை யாஷஸ்வி ஜெய்ஸ்வால், படிக்கல், சஞ்சு சாம்சன் ஈடுகட்டுகின்றனர். ரவிச்சந்திரன் அஸ்வின் இப்போது உண்மையில் ஒரு டி20 ஆல்ரவுண்டராக உருப்பெற்றுள்ளார், பிஞ்ச் ஹிட்டராக தொடக்கத்தில் இறங்குகிறார், பின்னால் பினிஷராக இறங்குகிறார் பவுலிங்கிலும் இவரை அடிக்க முடியவில்லை, பவர் ப்ளேயில் வீசுவார் மிடில் ஓவரில் வீசுவார் இறுதியில் வீசுவார். உண்மையில் அஸ்வினை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும்.
வேகப்பந்து வீச்சில் ராஜஸ்தான் பக்கம் பலம் உள்ளது, ட்ரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணாவின் ஹிட் த டெக் பவுலிங் பெரிய பிரச்சனைகளை பேட்டர்களுக்கு உருவாக்கி வருகிறது.
குஜராத் அணி (உத்தேச லெவன்)- ஷுப்மான் கில், 2 விருத்திமான் சாஹா, 3 மேத்யூ வேட், 4 ஹர்திக் பாண்டியா (கேப்டன்), 5 டேவிட் மில்லர், 6 ராகுல் திவேத்தியா, 7. ரஷித் கான், 8. ஆர் சாய் கிஷோர், 9 முகமது ஷமி, 10 லாக்கி பெர்குசன், 11. யாஷ் தயால்.
ராஜஸ்தான் ராயல்ஸ் லெவன் (உத்தேச)- 1 ஜோஸ் பட்லர், 2 யஷஸ்வி ஜெய்ஸ்வால், 3 சஞ்சு சாம்சன் (கேப்டன், wk), 4 தேவ்தத் பாடிக்கல், 5 ஷிம்ரோன் ஹெட்மியர், 6 ரியான் பராக், 7 ஆர் அஷ்வின், 8 ட்ரென்ட் போல்ட், 9 ஓபேட் மெக்காய், 10 யஜுவேந்திர சாஹல், 11 பிரசித் கிருஷ்ணா
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment