DRDO Recruitment 2022: பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை.. கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பள விவரங்கள் இதோ!
DRDO Recruitment 2022: பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை.. கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பள விவரங்கள் இதோ!
டிஆர்டிஓ 2022 வேலைவாய்ப்பு: நியமனம் மற்றும் சம்பள விவரங்கள்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் CEPTAM, DRDO, Metcalfe House, Civil Lines, New Delhi-110054 என்கிற முகவரியின் கீழ் நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.31,000 சம்பளம் வழங்கப்படும், மேலும் அரசு விதிமுறைகளின்படி ஹெச்ஆர்ஏ (HRA) மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படும்.
டிஆர்டிஓ 2022 வேலைவாய்ப்பு: விண்ணப்பதாரர்களுக்கான கல்வித்தகுதி
பர்ஸ்ட் டிவிஷனில் கேட் / என்இடி மதிப்பெண்ணுடன் பிஇ அல்லது பிடெக் பட்டம் பெற்ற அல்லது எம்இ / எம்டெக் பட்டம் பெற்றவர்கள் பின்வரும் படிப்புகளில் பர்ஸ்ட் டிவிஷனில் பிஇ / பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Application Link: https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/ceptam_jrf_2022.pdf
1. கம்ப்யூட்டர் சைன்ஸ் அண்ட் என்ஜினீயரிங் / டெக்னாலஜி
2. கம்ப்யூட்டர் சைன்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் என்ஜினீயரிங் / டெக்னாலஜி
3. கம்ப்யூட்டர் சைன்ஸ் / டெக்னாலஜி அண்ட் இன்ஃபர்மேடிக்ஸ் என்ஜினீயரிங்
4. கம்ப்யூட்டர் சைன்ஸ் அண்ட் சிஸ்டம் என்ஜினீயரிங்
5. கம்ப்யூட்டர் சைன்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி
6. இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி
7. கம்ப்யூட்டர் சைன்ஸ் என்ஜினீயரிங் / டெக்னாலஜி
8. சாப்ஃட்வேர் என்ஜினீயரிங் / டெக்னாலஜி
9. இன்ஃபர்மேஷன் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங் / டெக்னாலஜி
10. கம்ப்யூட்டர் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங்
11. கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங்
டிஆர்டிஓ 2022 வேலைவாய்ப்பு: வயது வரம்பு
டிஆர்டிஓ அறிவித்துள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு விண்ணபிக்க விரும்புவோர்களின் வயது 28 க்கு மேல் இருக்கக்கூடாது. “(விண்ணப்பதாரர்கள்) தேர்வு செய்யும் முறையானது முற்றிலும் சமயோசிதமானது மற்றும் ஆவணங்கள் மற்றும் ஒரிஜினல் சான்றிதழ்களின் சரிபார்ப்புக்கு உட்பட்டது. பணியில் சேரும் போது தகுதி, டிசிப்பிளீன்/ சப்ஜெக்ட், மதிப்பெண்களின் சதவீதம் அல்லது ஏதேனும் குறிப்பிட்ட அளவுகோல்கள் பூர்த்தியாகவில்லை என்றால், மேற்குறிப்பிட்ட தொடர்பான விவரங்களில் ஏதேனும் பொருந்தாத தன்மை காணப்பட்டால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேற்குறிப்பிட்ட எந்தவொரு விடயத்தின் கீழும் ஒரு விண்ணப்பம் தகுதி நீக்கம் செய்யப்படலாம்” என்று டிஆர்டிஓ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளம்பரம் கூறுகிறது.
Also Read : NCS போர்ட்டலில் கொட்டி கிடைக்கும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் - மத்திய அரசு தகவல்!
டிஆர்டிஓ என்பது இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள முதன்மையான நிறுவனமாகும், இது இந்தியாவின் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு கீழ் செயல்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment