3 வருஷம் காணாமல் போய்விட்டேன்.. தயாரிப்பாளர் மகனா இருந்தாலும் உழைப்புதான் வேணும்.. ஜெயம் ரவி பளீச்!
3 வருஷம் காணாமல் போய்விட்டேன்.. தயாரிப்பாளர் மகனா இருந்தாலும் உழைப்புதான் வேணும்.. ஜெயம் ரவி பளீச்!
நடிகர் ஜெயம் ரவி கடந்த 2003ல் வெளியான ஜெயம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தீபாவளி, தனி ஒருவன் என தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இந்திய அளவில் காணப்படுகின்றன.
குறிப்பாக அரவிந்த் சாமியுடன் இவர் இணைந்து நடித்திருந்த தனியொருவன் படம் இவருக்கு சைமா விருதை பெற்றுத் தந்துள்ளது. நயன்தாரா ஜோடி சேர்ந்திருந்த இந்தப் படம் ஜெயம் ரவியின் கேரியர் பெஸ்ட் படமாக அமைந்திருந்தது. சிறப்பான இந்தக் கேரக்டருக்கு அரவிந்த் சாமியின் வில்லத்தனம் சிறப்பான வலிமையை கொடுத்திருந்தது.
இந்நிலையில் விருது வழங்கும் விழா மேடையில் ஜெயம் ரவி பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விழாவில் பேசிய ஜெயம் ரவி, முன்னதாக பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார். நாம் சிறப்பான நிலையை அடைய முக்கிய தேவை என்ன என்பது குறித்து அவர் பதிலளித்தார்.
முன்னதாக பேசிய விக்னேஷ் சிவன், தான் வாய்ப்புக்களை பெருவதற்கு மிகுந்த சிரமப்பட்டதாகவும் அசிஸ்டெண்ட் இயக்குநராக இருந்து சான்ஸ் கேட்டு முன்னுக்கு வந்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஜெயம் ரவி, தயாரிப்பாளர் மகன் என்பதால் மட்டுமே தான் முன்னுக்கு வரவில்லை என்றும் மிகவும் கடினமான உழைப்பே தன்னை முன்னேற்றியது என்றும் குறிப்பிட்டார்.
திரையுலகில் 3 வருடங்கள் தான் காணாமல் போனதாகவும் அப்போதும் தான் கடினமாகவே உழைத்ததாகவும் தெரிவித்தார். அதன்பிறகு இந்த கடின உழைப்பையே தான் கொடுத்தாலும் எதற்காக உழைக்கிறோம் என்ற புரிதலுடன் தான் உழைத்ததாகவும் அந்த புரிதலே தனக்கு தனி ஒருவன் படத்திற்காக விருதை பெற்றுத் தந்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படக்குழுவினரை பாராட்டிய ஜெயம் ரவியை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் சிவா எச்சரித்தார். மனைவியை பாராட்டாமல் விட்டுவிட்டால் சோறு கிடைக்காது என்று தெரிவித்தார். இதை உடனடியாக சமாளித்த ஜெயம் ரவி அவருக்கு பாராட்டு தெரிவித்தார். அவரின் இந்த சமாளிப்பை அல்லு அர்ஜூன், நயன்தாரா உள்ளிட்டவர்கள் மிகவும் ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
தற்போது ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. வரும் செப்டம்பரில் இவரது பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகவுள்ளது. இதில் அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். தொடர்ந்து அவரது அகிலன், இறைவன் ஆகிய படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
Comments
Post a Comment