இன்னோவா காரில் வந்த ராஷ்மிகா..கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்.. எது செய்தாலும் தப்புனா எப்படி?
இன்னோவா காரில் வந்த ராஷ்மிகா..கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்.. எது செய்தாலும் தப்புனா எப்படி?
நேஷ்னல் க்ரஷ் நாயகியாக மாறிப்போன ராஷ்மிகா, தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி, என போன இடம் எல்லாம் கொடி கட்டிப்பறந்தார். இவர் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து தற்போது, தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். சரத்குமார், ஷாம், ஜெயசுதா என ஒரு நட்சத்திரபட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என படு பிசியாக இருக்கும் ராஷ்மிகா, படப்பிடிப்புக்காக அடிக்கடி விமானத்தில் பயணிக்க வேண்டிய சூழலும் உள்ளதாம். அந்த சமயத்தில் தனது செல்ல நாய்க்குட்டியையும் தன்னுடன் அழைத்து செல்வதாகவும், தனது நாய்க்கும் விமானத்தில் டிக்கெட் போட்டால் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று தயாரிப்பாளர்களிடம் கன்டிஷன் போட்டாக செய்திகள் வெளியானது.
இதையடுத்து, இணையவாசிகள் பலரும் என்னது நாய்க்கு விமானத்தில் டிக்கெட்டா? இது எல்லாம் ரொம்ப ஓவர் என்று பலர ராஷ்மிகாவை ட்ரோல் செய்தனர். ரசிகர்களின் விமர்சனத்தால், கடுப்பான ராஷ்மிகா, தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வளவு மோசமாகவா நடந்த கொள்வீர்கள்.. என் செல்லபிராணி ஆரா ஹைதராபாத்தில் இருப்பதாக கூறியிருந்தார்.
என்னத்தான் ராஷ்மிகா விளக்கம் அளித்தாலும், இணையவாசிகள் சிலர் அவரை ட்ரோல் செய்வதை நிறுத்தவில்லை. இந்நிலையில், ராஷ்மிகா இன்று மும்பையில் ஒரு அலுவலகத்திற்கு இன்னோவா காரில் வந்த வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், மிடில் க்ளாஸ் மக்கள் பயன்படுத்தும் இன்னோவா காரில் வருகிறீர்கள். தயாரிப்பாளரிடம் கேட்டு இருந்தால் சொகுசு காரை அனுப்பி இருப்பாரே என்றும் ராஷ்மிகாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.
Comments
Post a Comment