ஜானி மாஸ்டரையே தண்ணி குடிக்க வைத்த விஜய்.. பீஸ்ட் மேக்கிங் வீடியோவில் இதை கவனிச்சீங்களா?
ஜானி மாஸ்டரையே தண்ணி குடிக்க வைத்த விஜய்.. பீஸ்ட் மேக்கிங் வீடியோவில் இதை கவனிச்சீங்களா?
தமிழ் சினிமாவை பொறுத்தவரை டான்ஸ்ன்னா அது நடிகர் விஜய் தான். வேறலெவலில் ஒவ்வொரு படத்திலும் வித விதமான கஷ்டமான ஸ்டெப்புகளை அழகாக ஆடி அசத்தி வருகிறார். நடனம், பாடல் என சினிமாவில் ஏகப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் விஜய். அவருடைய படங்களின் பாடல்கள் வெளியானாலே யூடியூபில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்து விடுகின்றன. உலகளவில் தற்போதும் பீஸ்ட் படத்தின் ஹலமதி ஹபிபோ டாப் 10 பாடல்களில் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
செம ஜாலியாகவும் அப்படியே ரசிகர்களை பூஸ்ட் அப் செய்யும் விதமாகவும் பாடலாசிரியர் கு. கார்த்திக் எழுதிய ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு வாய்ஸ் மட்டுமின்றி வெறித்தனமான டான்ஸையும் போட்டுள்ளார் நடிகர் விஜய். சமீபத்தில் அந்த பாடல் உருவாக்கப்பட்ட மேக்கிங் வீடியோ வெளியாகி டிரெண்டானது. அதில், இடம்பெற்ற ஒரு காட்சியை குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
ஹலமதி ஹபிபோ மற்றும் ஜாலியோ ஜிம்கானா என பீஸ்ட் படத்தில் வித்தியாசமாகவும் வெறித்தனமாகவும் நடிகர் விஜய்க்கு நடன ஸ்டெப்புகளை அமைத்துக் கொடுத்த ஜானி மாஸ்டர், ஜாலியோ ஜிம்கானா பாடலில் ஒரு இடத்தில் விஜய்யுடன் இணைந்து ஆடும் போது, அவரால் அந்த ஸ்டெப்பை முழுமையாக முடிக்காமல் போக, விஜய் அசால்ட்டாக ஆடும் காட்சிகள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் ஆல் தோட்ட பூபதி பாடல் ரீமிக்ஸ் வேற இடம் பெறப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. புஷ்பா படத்திலேயே ராஷ்மிக மந்தனா கவர்ச்சி ஆட்டம் போட்ட நிலையில், வாரிசு படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா இணைந்து எந்தளவுக்கு வித்தைகளை இருக்கப் போறாங்களோன்னு பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தீபாவளிக்கு ஃபர்ஸ்ட் சிங்கிள் கண்டிப்பாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment