பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!408962266


பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!


தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி அனைத்து அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கோவில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர்  விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கன மக்கள் கலந்து கொள்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது. இந்த ஆண்டு கோவிலில் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

 

அதன்படி, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 440-வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ம் தேதி 10-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ம் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது.

 

இந்நிலையில் பனிமய மாதா பேராலய திருவிழாவை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5-ம் தேதி விடுமுறைக்கு பதில் ஆகஸ்ட் 13-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

Cheddar Cheese Coins

எல்லைக்கோடுகளும் கடலும் நம்மைப் பிரித்தாலும் இலங்கைத் தமிழர்கள்...