அதிக கலர் ஊற்றி விற்பனை செய்யப்ட்ட பழச்சாறு, பழச்சாற்றை குடித்த மாணவி உயிரிழப்பு, தாய் உயிருக்கு போராட்டம்465401866


அதிக கலர் ஊற்றி விற்பனை செய்யப்ட்ட பழச்சாறு, பழச்சாற்றை குடித்த மாணவி உயிரிழப்பு, தாய் உயிருக்கு போராட்டம்


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 42). இவர் கயத்தாறில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி (40). இவர்களுடைய மகள் லட்சுமி பிரியா (15), நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பழச்சாறு குடித்தனர் கடந்த 11-ந்தேதி சாந்தியும், லட்சுமி பிரியாவும் கயத்தாறில் உள்ள குளிர்பான கடையில் பழச்சாறு பார்சல் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்று குடித்தனர். பின்னர் அவர்களுக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கயத்தாறு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து அவர்களை மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் லட்சுமி பிரியா பரிதாபமாக இறந்தார். சாந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார் விசாரணை இதற்கிடையே, தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக மகாலிங்கம் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து லட்சுமி பிரியாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கயத்தாறில் பழச்சாறு குடித்த மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

 

Comments

Popular posts from this blog