ஆபரேஷன் கந்துவட்டி! டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை! 774136174
ஆபரேஷன் கந்துவட்டி! டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை! கந்துவட்டி கொடுமைத் தொடர்பாக, வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், 'ஆபரேஷன் கந்துவட்டி' நடவடிக்கை மூலம் கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் நிலுவையில் உள்ள வழக்குகளையும் உடனடியாக விசாரித்து, தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுகுறித்து காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, “கந்துவட்டி கொடுமை தொடர்பான புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டி தொடர்பான வழக்குகளை கையாள 'ஆபரேஷன் கந்துவட்டி' என்ற சிறப்பு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. கந்துவட்டி தொடர்பாக காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டிகாரர்களின் இருப்பிடங்களை உடனடியாக சோதித்து, கையெழுத்துப் பெற்ற காகிதங்கள், சட்ட விரோதமான ஆவணங்கள், தொகை குறிப்...
Comments
Post a Comment