இன்று முதல் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! களை கட்டும் திருவிழாக்கள்! இன்று முதல் தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடைசி நேர பரபரப்பில், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள், பேருந்தில் டிக்கெட் கிடைக்காதவர்கள் என சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டவர்கள் ஆம்னி பேருந்துகளை நாடி, ஆயிரக்கணக்கில் பணத்தை இழப்பதற்கு முன்பாக, ஒரு அஞ்சு நிமிஷம் அரசு பேருந்துகளில் டிக்கெட் கிடைக்கிறதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல், தமிழக அரசு, பேருந்துகளை பராமரிக்கிறது. இன்னும் நிஜம் பேசனும்னா, இந்த பண்டிகை விடுமுறை தினங்களில் வலம் வரும் பல தனியார் பேருந்துகளை விட ஆயிரம் மடங்கு தமிழக அரசு பேருந்துகள் சிறப்பாகவே பராமரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் திருவிழாக்கள் களை கட்ட துவங்கியுள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்கள் தற்போது 10 நாட்கள் தசரா பூஜை விடுமுறையில் உள்ளனர். நவராத்திரி, விஜயதசதி, ஆயுத பூஜை என்று தொடர் விடுமுறைக்கு பல ஊர்களில் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நட...