இன்று முதல் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! களை கட்டும் திருவிழாக்கள்!1584979636


இன்று முதல் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! களை கட்டும் திருவிழாக்கள்!


இன்று முதல் தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடைசி நேர பரபரப்பில், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள், பேருந்தில் டிக்கெட் கிடைக்காதவர்கள்  என சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டவர்கள் ஆம்னி பேருந்துகளை நாடி, ஆயிரக்கணக்கில் பணத்தை இழப்பதற்கு முன்பாக, ஒரு அஞ்சு நிமிஷம் அரசு பேருந்துகளில் டிக்கெட் கிடைக்கிறதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல், தமிழக அரசு, பேருந்துகளை பராமரிக்கிறது. இன்னும் நிஜம் பேசனும்னா, இந்த பண்டிகை விடுமுறை தினங்களில் வலம் வரும் பல தனியார் பேருந்துகளை விட ஆயிரம் மடங்கு தமிழக அரசு பேருந்துகள் சிறப்பாகவே பராமரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் திருவிழாக்கள் களை கட்ட துவங்கியுள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்கள் தற்போது 10 நாட்கள் தசரா பூஜை விடுமுறையில் உள்ளனர். நவராத்திரி, விஜயதசதி, ஆயுத பூஜை என்று தொடர் விடுமுறைக்கு பல ஊர்களில் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடத்தப்பட உள்ளன. தொடர் விடுமுறை தினங்களை  முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்று வரவும் பலரும் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில், மக்கள் எளிதாக சென்று வரும் வகையில் அரசு சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் தசரா பண்டிகை வெகு விமரிசையாக துவங்கியுள்ளது. பல ஊர்களில் ஏன் வெளி மாநிலங்களில் இருந்தும் கூட பலரும் குலசேகரப்பட்டினத்தில் குவிந்துள்ளனர். இந்நிலையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், இன்று அக்டோபர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை, சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசேரப் பட்டினத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர், குலசேரப் பட்டினத்திற்கும் தினசரி  கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதே போல் பண்டிகை முடியும் நாட்களிலும் அதாவது அக்டோபர் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  இந்த அரிய வாய்ப்பினை பக்தர்கள் முழுவதுமாக பயன்படுத்தி சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை தினங்களைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Comments

Popular posts from this blog