தென் கொரிய ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசல்!! 151 பேர் பலி, 82 பேர் காயம்!!1673587532
தென் கொரிய ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசல்!! 151 பேர் பலி, 82 பேர் காயம்!!
முதலில் டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இறந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், 19 பேர் வெளிநாட்டவர். எதனால், இந்த நெரிசல் ஏற்பட்டது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஆனால், பெருந்தொற்றுக்குப் பிறகு முதல் முறையாக நடக்கும் முகக் கவசம் அணியாத ஹாலோவீன் திருவிழா இது.
சோல் நகரின் இரவு வாழ்க்கைக்குப் பெயர் பெற்ற இடாவூன் என்ற பகுதியில் குறுகலான தெருவில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் நுழைந்த நிலையில், இந்த விபத்து நேரிட்டது.
2014ம் ஆண்டு படகு மூழ்கி ஏற்பட்ட விபத்தில் 300 பேர் இறந்த சம்பவம் தென் கொரியாவை உலுக்கியது. அதற்குப் பிறகு, ஏற்பட்ட மிகப்பெரிய விபத்து இதுவாகும்.
தொடக்கத்தில், சம்பவம் நடந்த உடனே வெளியான வீடியோக்களில், மயங்கிய நிலையில் உள்ள பலருக்கு தெருவோரத்தில் அவசரகால சேவைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதையும், ஏராளமான கூட்டம் அந்த இடத்தில் சூழ்ந்திருப்பதையும் பார்க்க முடிந்தது.
பேரிடர் மீட்புக் குழுவினரை அந்த இடத்துக்குச் செல்லும்படி உத்தரவிட்டுள்ளார் அதிபர் யூன் சுக்-இயோல்.
Comments
Post a Comment