அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது புயல்..!2018604865
அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது புயல்..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும்.
புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்.25 ஆம் தேதி அதிகாலை அதிகாலை வங்கதேசம் டிங்கோனா தீவு-சந்திவிப் இடையே கரையை கடக்கும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 27ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல், ஒடிசா, மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
Comments
Post a Comment