100வது நாள் வெற்றியில் ‘லவ் டுடே’.. இரண்டு மெகாஹிட் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதன்.!1825103103
100வது நாள் வெற்றியில் ‘லவ் டுடே’.. இரண்டு மெகாஹிட் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதன்.!
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்களை கடந்து திரையரங்கிகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது.
2019-ல் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன் வெற்றியை தொடர்ந்து ‘லவ் டுடே’ படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
வெறும் 9 கோடியில் தயாரான லவ் டுடே திரைப்படம் 100 நாட்களில் 80 கோடி வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்திருக்கிறது. இதில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி செல்போனை மாற்றிக் கொள்வதால் காதலர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினையை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டது.
இளசுகள் விரும்பும் வகையில் மிகவும் எதார்த்தமான கதையைக் கொண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இவருடன் இப்படத்தில் இவானா, சத்யராஜ், யோகி பாபு, ராதிகா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது.
கடந்த நவம்பர் 4-ம் தேதி வெளியான இந்த படம் இன்றுடன் 100வது நாளை எட்டியுள்ளது. மேலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான தியேட்டர்களில் மட்டும் அல்லாமல் பிற தியேட்டர்களிலும் இந்த படம் 100வது நாள் வரை ஓடி இருக்கிறது. இதனால் லவ் டுடே தமிழ்நாடு முழுவதும் இரண்டாவது ரவுண்டு ஓடி சாதனை படைத்துள்ளது.
கடந்த நவம்பர் 4-ம் தேதி வெளியான இந்த படம் இன்றுடன் 100வது நாளை எட்டியுள்ளது. மேலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான தியேட்டர்களில் மட்டும் அல்லாமல் பிற தியேட்டர்களிலும் இந்த படம் 100வது நாள் வரை ஓடி இருக்கிறது. இதனால் லவ் டுடே தமிழ்நாடு முழுவதும் இரண்டாவது ரவுண்டு ஓடி சாதனை படைத்துள்ளது.
படம் 100 நாட்களை கடந்தையடுத்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “லவ் டுடே 100 நாட்கள் திரையரங்குகளை நிறைவு செய்கிறது உங்கள் அனைவரின் அன்பினால் மட்டுமே ஒரு மாபெரும் வெற்றி சாத்தியம், எங்களுடன் நின்று, எங்களுக்காக வேரூன்றி, இந்தப் படத்தை ஒரு கல்ட் கிளாசிக் ஆக்கியதற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
Comments
Post a Comment