10 ஆண்டுகளாக குழந்தை இல்லை... மருமகளை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கொடூர மாமியார்! திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கழுவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(38). இவர் ஊரில் பந்தல் மற்றும் பாத்திரங்களை வாடகைக்கு விடும் கடை வைத்துள்ளார். இவருக்கும் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த துவரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தனலட்சுமி(35) என்பவருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் குழந்தை இல்லை என்பதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 21-ம் தேதி தொழில் சம்பந்தமாக மகேந்திரன் வெளியூர் சென்றுள்ளார். இதனால் அன்று இரவு வீட்டை ஒட்டியுள்ள சிறிய வீட்டில் தனலட்சுமி உறங்க சென்றுள்ளார். பெரிய வீட்டில் மாமியார் ரஞ்சிதம் மற்றும் நாத்தனார் மகன்கள் இருவர் தூங்கிக்கொண்டிருந்தனர். மறுநாள் 22-ம் தேதி காலை நீண்ட நேரமாகியும் சிறிய வீட்டிலிருந்து தனலட்சுமி எழுந்து வராததால் உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியட...
Comments
Post a Comment