DRDO Recruitment 2022: பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை.. கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பள விவரங்கள் இதோ! டிஆர்டிஓ எனப்படும் டிஃபென்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன் ( Defence Research and Development Organization - DRDO) ஆனது அதன் சென்டர் ஃபார் பெர்சனல் டேலண்ட் மேனேஜ்மென்ட்டிற்கான (Centre for Personnel Talent Management - CEPTAM) ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (Junior Research Fellow - JRF) பதவிகளுக்கு, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்க தொடங்கி உள்ளது. குறிப்பிட்ட வேலைக்கான விண்ணப்பப் படிவம் டிஆர்டிஓ-வின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் கிடைக்கிறது. அதாவது drdo.gov.in வழியாக அணுக கிடைக்கிறது. டிஆர்டிஓ 2022 வேலைவாய்ப்பு: நியமனம் மற்றும் சம்பள விவரங்கள் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் CEPTAM, DRDO, Metcalfe House, Civil Lines, New Delhi-110054 என்கிற முகவரியின் கீழ் நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.31,000 சம்பளம் வழங்கப்படும், மேலும் அரசு விதிமுறைகளின்படி ஹெச்ஆர்ஏ (HRA) மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படும். டிஆர்டிஓ 2022 வேலைவாய்ப்பு: விண்ணப்பதாரர்களுக்கான கல்வித்தகுதி...